தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி..செவ்வாய்.. சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பண யோகம்

சனி..செவ்வாய்.. சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பண யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 12:00 PM IST

Saturn Mars and Venus: சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் பணவரவை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன்
சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன்

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல் ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒருவருடைய ராசியில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகவும் இந்நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார் அதே சமயம் மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசிகள் நுழைகின்றார் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இதில் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

மேஷ ராசி

 

சனி, சுக்கிரன், செவ்வாய் இந்த மூன்று ராசிகளின் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

மிதுன ராசி

 

3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நிதி ஆதாயங்களை அதிகப்படுத்தி உள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசி

 

3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நல்ல நம்பிக்கையை அதிகப்படுத்தி பண வரவை அதிகப்படுத்தும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வேலை செய்யும் இடத்தில் கட்டாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel