தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் அசுர வேட்டை ஆடும் புதன்.. பணக்கடலில் சிக்கிக் கொண்டு தவிக்கப் போகும் 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

மீனத்தில் அசுர வேட்டை ஆடும் புதன்.. பணக்கடலில் சிக்கிக் கொண்டு தவிக்கப் போகும் 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 12:18 PM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன்
புதன்

புதன் பகவானின் உதயத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் இருந்து தடைகள் அனைத்தும் மீண்டும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் பெருகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் அனைத்தும் இல்லாமல் போகும் புதிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. சொத்து சம்பந்தப்பட்ட முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் தேடி வரும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தேடித் தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel