தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி நட்சத்திர மாற்றம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Sani: சனி நட்சத்திர மாற்றம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 14, 2024 11:42 AM IST

Lord Saturn: சனியின் நட்சத்திரம் மாற்றத்தால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார்கள் அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். அந்த வகையில் சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்மவினைகளை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது. நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் பிப்ரவரி 10ஆம் தேதி என்று சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பக்கத்தில் முன் நுழைந்தார். இந்த நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கியது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் அதிக அலைச்சல் உண்டாகக் கூடிய சூழ்நிலை உண்டாகும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுடைய நண்பர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களால் ஏமாற்றம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செய்யும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடக ராசி

 

சனி பகவான் தாக்கம் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும். உங்கள் வேலையில் நீங்கள் கட்டாயம் நேர்மையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு விதமான சிக்கல்கள் வரும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. அவ்வப்போது சில நஷ்டங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

துலாம் ராசி

 

சனி பகவான் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கப் போகின்றார். அது சாதகம் அற்ற சூழ்நிலையாக அமையும். மன அழுத்தம் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel