தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் பறக்கிறார்கள்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பண மழையை அனுபவிக்க தயாராகுங்கள்

மீனத்தில் பறக்கிறார்கள்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பண மழையை அனுபவிக்க தயாராகுங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 02:16 PM IST

Lord Mercury: மீனம் ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவானால் நேரடி பயணம் நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவான் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நேரடியாக பயணம் செய்து வருகின்றார். இது பல ராசிகளுக்கு தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். நன்மைகள் தீமைகள் என அனைத்து பலன்களும் கிடைக்கும்.

மீனம் ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவானால் நேரடி பயணம் நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு பெரிய நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணம் சேமிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமைகளால் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கு திறமை அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

புதன் பகவான் நேரடியான பயணத்தை மேற்கொண்டு வருவதால் உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைக்குள் அமையும். செலவுகள் குறையும். பணத்தை வீணடிக்க மாட்டீர்கள். சம்பாதித்த பணத்தை சொத்து வாங்குவதற்காக பயன்படுத்துவார்கள்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் நேரடி பயணம் உங்களது பொருளாதாரத்தை அதிகப்படுத்த போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல தருணமாக அமையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மனமகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நிதி நிலைமையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel