அஸ்வினியில் சூறாவளியை கிளப்பிய சுக்கிரன்.. 10 நாட்கள் விடாத பண மழையில் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி.. ஓடி வந்து பாருங்க-let us see the rasis who are going to enjoy the royal life due to the transit of venus - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அஸ்வினியில் சூறாவளியை கிளப்பிய சுக்கிரன்.. 10 நாட்கள் விடாத பண மழையில் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி.. ஓடி வந்து பாருங்க

அஸ்வினியில் சூறாவளியை கிளப்பிய சுக்கிரன்.. 10 நாட்கள் விடாத பண மழையில் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி.. ஓடி வந்து பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 09:39 AM IST

சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி ஆன இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் செல்ல உள்ளார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் சுக்கிரனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி
சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி

இந்த ஏப்ரல் மாத இறுதியில் சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி ஆன இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் செல்ல உள்ளார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் சுக்கிரனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சிறப்பான யோகங்களை பெற உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் செயல் திறனை அதிகப்படுத்தி பாராட்டுகளை பெற்று தரும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். பல்வேறு விதமான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணமத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகளையும் அமையும் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும்.

கன்னி ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகங்களை பெற்று தரப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் ஆளுமை திறனால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9