தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது நட்சத்திர மாற்றம்.. புத்தாண்டில் பணமழை பெறுகின்ற ராசிகள்

Rahu Ketu: ராகு கேது நட்சத்திர மாற்றம்.. புத்தாண்டில் பணமழை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 12:44 PM IST

Rahu Ketu Transit: ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியால் பலன்களை பெறும் ராசிகளை காண்போம்.

ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி
ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி

அசுப கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேது 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகிறார்கள். அதன் காரணமாக ராகு மற்றும் கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். நவகிரகங்களில் இவர்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறியுள்ளனர்.

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் இடமாற்றத்தால் இந்த புத்தாண்டு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தற்போது உங்களுடைய நிலைமை சீராக இருக்கும் திருமண தடைகள் அனைத்தும் விலகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து தடை விலகும். பணவரவில் இருந்த சிக்கல்கள் குறையும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் கேது பயணம் செய்த வருகின்றனர். வேலையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தோடு வெளிநாட்டில் கூடிய வாய்ப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இதுவரை தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் உங்களுக்கு விலகும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் இருந்த சிக்கல்கள் உலகம் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி பெற்றோர்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்