தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Transit: சனி நட்சத்திர மாற்றம்..கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிகள்

Saturn Transit: சனி நட்சத்திர மாற்றம்..கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2023 12:40 PM IST

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் சனி பகவான் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று ராகு பகவானின் சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். ஐந்து மாதம் இதே நட்சத்திரத்தில் பயணம் செய்யும் சனி பகவான் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திர இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தரப்போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சிம்ம ராசி

 

காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். நல்ல பலன்கள் உங்களை தேடி வர போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்