தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: செவ்வாய் தரும் பண யோகம்.. 3 ராசிகளுக்கு உச்சகட்டம்

Money Luck: செவ்வாய் தரும் பண யோகம்.. 3 ராசிகளுக்கு உச்சகட்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 02:27 PM IST

செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் மகர ராசியில் நுழைந்தார். இவர் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

இந்நிலையில் சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் பகவான் நிறைவேற்றி வைக்க உள்ளார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தையும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மகர ராசியில் நுழையும் செவ்வாய் பகவான் கொடுக்க உள்ளார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் .இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் சாதகமாக முடிவடையும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel