தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Peyarchi Luck: சனியால் உச்சம் செல்லும் ராசிகள்.. ராஜயோகம் இவர்களுக்கு தான்

Shani Peyarchi Luck: சனியால் உச்சம் செல்லும் ராசிகள்.. ராஜயோகம் இவர்களுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 17, 2024 12:49 PM IST

சனிபகவானால் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். சனி பகவானால் நல்ல யோகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

கடக ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் அமையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய திட்டங்கள் முன்னேற்றம் அடையும். நிதி ஆதாயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனியின் அஸ்தமனத்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel