தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகாலட்சுமி தேவியின் ஆசி பெற்ற ராசிகள்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

மகாலட்சுமி தேவியின் ஆசி பெற்ற ராசிகள்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 05:00 PM IST

Gajalakshmi Yoga: ஏப்ரல் 25ஆம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசியின் பயணம் செய்கின்றார். தற்போது மேஷத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்றார். இதனால் தான் இந்த கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது.

கஜலட்சுமி யோகம்
கஜலட்சுமி யோகம்

இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது பல்வேறு விதமான யோகங்கள் உருவாக்கும். சில நேரங்களில் அதன் நன்மைகளையும் சில நேரங்களில் தீமைகளையும் கொடுக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணையும் பொழுது இது போன்ற யோகங்கள் உருவாக்கும். என இது மனிதர்கள் மட்டுமல்லாது. உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட யோகங்களில் ஒன்றுதான் கஜலட்சுமி யோகம். இந்த கஜலட்சுமி யோகமானது புதன் மற்றும் குருபகவான் இவர்கள் இருவரும் இணையும் பொழுது உருவாக்குகின்றது. இது மேஷ ராசியில் உருவாக உள்ளது.

இந்த கஜலட்சுமி யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். ஏப்ரல் 25ஆம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசியின் பயணம் செய்கின்றார். தற்போது மேஷத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்றார். இதனால் தான் இந்த கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது.

மேஷ ராசி

 

உங்களுடைய ராசியில் லக்னத்தில் கஜலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் உங்களுக்கு பூர்விக சொத்துக்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கௌரவமான பதவிகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

கஜலட்சுமி யோகத்தால் உங்களுக்கு சகல வித யோகங்களும் கிடைக்க உள்ளன. ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர்வை தரக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

கும்ப ராசி

 

மேஷ ராசியில் உருவாகியுள்ள கஜலட்சுமி ராஜயோகம். உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். இதுவரை ஏற்பட்டு வந்த சிரமங்கள் அனைத்தும் குறையும். லட்சுமி தேவியின் முழு ஆசி உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைவதற்கான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சிறிய முயற்சி கூட வெற்றியை தேடி தரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் உங்களை முன்னேற்றக் கூடிய பணவரவு இப்பொழுதே உங்களைத் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel