தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan 2023: குரு பகவானின் பண மழையில் நனையும் ராசிகள்

Guru Bhagavan 2023: குரு பகவானின் பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2023 11:31 AM IST

குரு பகவானால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், மகிழ்ச்சி உள்ளிட்டவற்றிற்கு காரணியாக குரு பகவான் விளங்குகிறார். குருபகவானின் பின்னோக்கிய பயணமானது டிசம்பர் 31ம் தேதி வரை நிகழவுள்ளது. இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பண வரவு அதிகரிக்கும். வருமானத்தில் இருந்து குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

 

குரு பகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திலிருந்து குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை தரப்போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்