தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குருவால் உச்சம் தொடப்போகும் ராசிக்காரர்கள்

Guru: குருவால் உச்சம் தொடப்போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 03, 2023 11:30 AM IST

குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெற போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான் குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அந்த ராசிக்கு குழந்தை பாக்கியம், செல்வம், செழிப்பு, பணம், திருமண வாக்கியம் உள்ளிட்டவைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது

குருபகவான் மேஷ ராசியில் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். டிசம்பர் மாத இறுதிவரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு பகவானால் நீங்கள் ராஜயோகத்தை பெறப் போகின்றீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

 

குருபகவானின் இந்த வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு பணவரவை உண்டாக்கப் போகின்றது. திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடக ராசி

 

குரு வக்ரப்பயணமானது உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்