தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி உதயத்தால் யோகம் பெறும் ராசிகள்

Sani: சனி உதயத்தால் யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 02, 2023 10:55 AM IST

சனிபகவானால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினால் இரண்டாவது ஆண்டு காலம் அதனை விட்டு நகர மாட்டார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் சனி பகவான். நவகிரகங்களும் அவ்வப்போது உதயமாகி அஸ்தமனம் ஆவது வழக்கம்.

அந்த வகையில் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் 2024 ஆம் ஆண்டு உதயமாக போகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார் அவருடைய இதயத்தால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நல்ல நேரம் தொடங்கி விட்டது.

மகர ராசி

 

சனிபகவானின் உதயத்தால் உங்களுக்கு பணம் கொட்டப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு படைப்பு அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்