தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips : இந்த நான்கு பொருட்கள் வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம் பொங்குமாம்? இது உங்கள் வீட்டில் இருக்கா?

Vastu Tips : இந்த நான்கு பொருட்கள் வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம் பொங்குமாம்? இது உங்கள் வீட்டில் இருக்கா?

Divya Sekar HT Tamil
Sep 16, 2023 10:30 AM IST

வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த நான்கு பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் லட்சுமி கடாட்சம் பொங்கும் என கூறப்படுகிறது அது என்னென்ன பொருட்கள் என்பது குறித்து இங்கே காண்போம்.

லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்க வழிகள்
லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்க வழிகள்

அதன்படி இந்த நான்கு பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் லட்சுமி கடாட்சம் பொங்கும் என கூறப்படுகிறது அது என்னென்ன பொருட்கள் என்பது குறித்து இங்கே காண்போம்.

வெள்ளி யானை சிலை

சக்தி மற்றும் செழிப்பின் சின்னமாக விளங்கக்கூடிய யானையின் சிலை லட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். வெள்ளியால் செய்யப்பட்ட யானை சலியை வீட்டில் வைத்திருந்தால் நன்மைகள் அதிகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதை வைத்திருந்தால் ராகு பகவான் சாந்தமடைவார் எனக் கூறப்படுகிறது.

ஏகாசி தேங்காய்

இந்த தேங்காவை வீட்டில் வைத்திருந்தால் அன்னை லட்சுமியின் அருள் மழை உங்களுக்கு பொழியும் என கூறப்படுகிறது.இந்த தேங்காய் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியவை ஆகும். ஒற்றை கண் கொண்ட இந்த தேங்காயை ஏகாசி தேங்காய் என கூறுவார்கள். 

மஞ்சள் காசு

காசை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் வைத்திருந்தால் பணப்பற்றாக்குறை ஏற்படாது என கூறப்படுகிறது. லட்சுமி தேவியின் அடையாளமாக விளங்கக்கூடிய இந்த மஞ்சள் காசை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும் என கூறப்படுகிறது.

மீன் சிலை

மீன்களின் சிலையை வைக்க முடியாவிட்டால், ஒரு ஜோடி மீன்களின் ஓவியத்தை வீட்டில் வைத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆரோக்கியம் மற்றும் வலிமை உள்ளிட்டவற்றிற்கு சின்னமாக கருதப்படும் இந்த மீன் சிலையை பித்தளை மற்றும் வெள்ளி உலகத்தால் செய்து வீட்டில் வைத்திருந்தால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்