Tamil New year Rasipalan: ஜாக்பாட் அடிக்கும் காலம்..புதிய பதவி ? - விருச்சிக ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்!
Tamil New year Rasipalan 2024: கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி தமிழ்ப்புத்தாண்டில் விருச்சிக ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு வரும் 14 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சோபகிருது ஆண்டு முடிவடைந்து குரோதி ஆண்டு பிறக்கப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டு 2024 விருச்சிக ராசிக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் விருச்சிக ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 21, 2025 03:06 PMஇந்த 4 ராசிகளுக்கு துணையின் மீது நம்பிக்கை குறைவாக இருக்குமாம்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க!
Mar 21, 2025 02:17 PMசனி பெயர்ச்சி பலன்: சனி வீட்டின் முன் நிற்கிறார்.. சொர்க்க வாசலை திறக்கப் போகும் ராசிகள்.. யாருக்கு யோகம்?
Mar 21, 2025 12:33 PMகுபேர குரு யோகம்: குரு உருவாக்கிய குபேர யோகம்.. பணத்தை அள்ளிச் சென்று வாழும் ராசிகள் யார்?.. தலைகீழாக மாறப் போகுதா?
Mar 21, 2025 12:25 PMLucky Moles : உங்கள் முகத்தில் உள்ள மச்சங்களை வைத்து நீங்கள் யார் என்பதை பார்க்கலாமா.. யார் அதிர்ஷ்டசாலிகள் பாருங்க!
Mar 21, 2025 11:46 AMசூரியனின் பெயர்ச்சி : அதிர்ஷ்ட காத்து இனி உங்க பக்கம்.. சூரிய பகவானால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மாறப் போகிறது!
Mar 21, 2025 10:01 AMசுக்கிர பெயர்ச்சி: உங்க ராசி என்ன சொல்லுங்க?.. சுக்கிரன் மீனத்தில் நுழைந்தார்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருகிறது?
விருச்சிக ராசியினரே இந்த தமிழ் புத்தாண்டு முதல் உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டாக அமையும். இந்த குரோதி தமிழ் புத்தாண்டில் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. இதனால் சகல செல்வங்களும் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அரசாங்க பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல் சார்ந்து இருப்பவர்களுக்கு அந்தத் துறையில் செல்வாக்கு உயரும்.
பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அலைச்சலை உண்டாக்கினாலும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் சூழல் உருவாகும். நல்ல இடமாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும். ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அஜீரண கோளாறு, கால்வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உடல்நலம் தொடர்பாக கவனமாக இருக்கவும்.
அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். சில நேரங்களில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். சிலருக்கு திடீர் பதவி உயர்வு கிடைக்கும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்கள், பொறுப்பு உணர்வுடன் படிப்பது நல்லது. விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்கள் சாதகமாக அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு உத்தியோக ஸ்தானம் உண்டு. பண நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் விலகும் ஆண்டாக இந்தாண்டு அமையும். குரு 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் நீண்ட நாள் கனவு நனவாகும் நேரம் இது. குரோதி புத்தாண்டில் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் போகிறது என்பதையே ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.
குறிப்பு: குரோதி வருடத்தில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய தளத்தில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
