தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Avani Avittam 2023: ஆவணி அவிட்டத்தின் சிறப்புகள் என்ன?

Avani Avittam 2023: ஆவணி அவிட்டத்தின் சிறப்புகள் என்ன?

Manigandan K T HT Tamil
Aug 30, 2023 10:30 AM IST

அவர்களது பரம்பரையினர் அந்தந்த வேதப் பிரிவைச் சார்ந்திருப்பார்கள். அதன்படியே தங்கள் புனிதச் சடங்குகளைச் செய்து வருவார்கள்.

ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம்

உபாகர்மா பொதுவாக ஆடி/ஆவணி மாதத்தின் பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. ஆனால் ஒருவரின் வேத பிரிவு கிளையின் அடிப்படையில் நாட்கள் வேறுபடும். வேதங்களாவன இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பழையகாலத்திலிருந்து மக்கள் தங்களை இந்தப் பிரிவுகளுள் ஒன்றுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது பரம்பரையினர் அந்தந்த வேதப் பிரிவைச் சார்ந்திருப்பார்கள். அதன்படியே தங்கள் புனிதச் சடங்குகளைச் செய்து வருவார்கள்.

சிராவண மாதம் என்பது ஆடி அமாவாசையில் தொடங்கி, ஆவணி அமாவாசை வரை உள்ள காலமாகும். இந்த சிராவண மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரம் பௌர்ணமி நாள் யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் நடக்கும்.

அடுத்த மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தன்று சாம வேதிகளின் உபாகர்மமும் நடக்கும்.

தமிழ் நாட்டில் மிகப் பெரும்பாலானோர் யஜுர் வேதிகளாக இருப்பதாலும், அவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்வதாலும் தமிழில் உபாகர்மத்துக்கு "ஆவணி அவிட்டம்" என்றே பொதுவாகச் சொல்லப்படுகிறது.

இந்நாளில் தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர்.

பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

உபாகர்மம் நடந்த அடுத்த நாள் காயத்ரி ஜபம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். காயத்ரி மந்திரத்தை 1008 தடவைகள் உச்சாடனம் செய்யவேண்டும். இதனை கூட்டு வழிபாடாக செய்யும்போது எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அந்த எண்ணிக்கையால் 1008 ஐ வகுத்து அத்தனை தடவைகள் எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்