தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Children Luck Rasis: ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்?

Children Luck Rasis: ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்?

Marimuthu M HT Tamil
Sep 16, 2023 12:41 PM IST

ராசிப்படி ஒவ்வொரு ராசிக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கும் என சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்?
ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்?

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பதால் குழந்தைகளின் மீது அலாதியான பிரியத்துடன் இருப்பார்கள்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. இந்த ராசிக்காரர்கள் பொறுமைசாலியாக இருப்பதால், குழந்தைகளை சாமர்த்தியமாக வளர்ப்பார்கள். 

மிதுனம்: ஜோதிடத்தின்படி மிதுன ராசிக்காரர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு; அதுவும், இரட்டைக் குழந்தைகள் பெற வாய்ப்புண்டு. ஒருவேளை முதலில் ஆண் குழந்தை பிறந்தால், அடுத்ததும் ஆண் குழந்தையாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

கடகம்: கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, இரண்டு குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. அதுவும் சில ஆண்டுகள்தான் பிறக்கும். அதுவும் கடக ராசிக்காரர்களுக்கு தாய்மை உணர்வு அதிகம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இரண்டு அல்லது நான்கு குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு என சோதிடம் கூறுகிறது. இவர்கள் சாந்தமாக குழந்தைகளை,வளர்ப்பர்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு குழந்தை தான் பிறக்க வாய்ப்புண்டு என சோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் அதிகப் பதற்றத்துடன் இருப்பதால், ஒரு குழந்தை மட்டுமே போதும் என முடிவு எடுப்பர்.

துலாம்: நேர்மை மற்றும் சமத்துவத்தை நேசிக்கக்கூடியவர்களாக துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் தான் குழந்தைகள் இருக்கும்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்காக நிறைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் சற்று முன்கோபம் கொண்டவர்களாக இருந்தாலும், பாசம் மிக்கவர்களாக இருப்பர்.

தனுசு: தனுசு ராசிக்கார பெண்களுக்கு ஒரு குழந்தை அல்லது குழந்தையே பிறக்காமல்கூட இருக்கலாம். இந்த ராசிக்காரர்கள் சாந்தமாக இருந்தாலும், அவர்களின் ஓவர் கன்ஃபிடன்ஸ் அவர்களை தாய்மை அடையவிடாமல் பாதிக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள், மூன்று குழந்தைகளைப் பெற்று எடுக்கும் யோகம் கொண்டவர்கள். மேலும், இவர்கள் ஒரே நேரத்தில் சாதுரியமாகப் பல வேலைகளை செய்யும் திறன் கொண்டவர்கள்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களும் துணிச்சல்காரர்கள். இவர்களிடம் இருக்கும் துடுக்குத்தனத்தால் குழந்தையின்மை ஏற்பட வாய்ப்புண்டு என சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இருந்தாலும் கடின முயற்சியால் ஒரு குழந்தை கிடைக்க வாய்ப்புண்டு எனலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஐந்து குழந்தைகளுக்கும் மேல் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்புண்டு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்