தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பழமை மிக்க ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில்!

பழமை மிக்க ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 02, 2022 07:34 PM IST

குழந்தை பாக்கியம் அருளும் திருப்பரங்குன்றம் ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில்
ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில்

கன்மாயின் கரையில் அமைந்திருந்த அம்மன் மீது காலை உதிக்கும் சூரியனின் வெயில் மற்றும் மாலையில் மறையும் வெயில் படுவதால் இக்கோயிலுக்கு வெயில் உகந்த அம்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, காஷ்மீர், ஆந்திரா, இமாலயம், அசாம், கேரளா எனப் பல மாநிலங்களில் அமைந்துள்ள அம்மனின் 51 சக்தி பீடங்கள் இங்குள்ள சுவர்களில் உள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இங்கு உள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளது.

கோயில் வாசலில் வேப்ப மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார் விநாயகர். அவரை சுற்றியும் நாகத்தின் சிலைகள் அமைந்துள்ளது. இக்கோயில் விநாயகரை வணங்குவதன் மூலம் நாக தோஷம், குடும்ப நன்மைகள் அடையலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

வேப்ப மரத்தின் அருகில் ஸ்ரீ மூங்கில் அன்னை காமாட்சியம்மன் மிக ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கிறார். கல்யாணமாகாத பெண்கள் ஸ்ரீ மூங்கில் அன்னை காமாட்சியம்மனை வழங்கி அருகில் உள்ள வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் கல்யாணம் மிக விரைவாக நடைபெறும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் குழந்தை இருக்கும் மரத்தில் கட்டி வைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் பெறுவதாகவும் கூறுகின்றனர்.

நவகிரக வழிபாடு இதன் மூலம் பல்வேறு நட்சத்திர தோஷம் நீங்குவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். வருடங்கள் தோறும் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழாக்களைக் கொண்டாடி வருகிறார்கள் பக்தர்கள்.

WhatsApp channel