பழங்குடியின மக்களின் பார்பிக்யூ.. அமெரிக்காவின் பாரம்பரிய உணவு.. உலகம் முழுவதும் பரவிய உணவு வரலாறு
Barbecue: பூர்வீக அமெரிக்காவின் பாரம்பரிய உணவான பார்பிக்யூ உணவின் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக மத்திய அமெரிக்க பகுதியில் தான் இந்த பார்பிக்யூ உணவு தயாரிப்பு முறை தொடங்கியது.

Barbecue: பாரம்பரிய உணவுகளை தயாரிப்பதில் உலக நாடுகளில் இந்தியாவிற்கு தனி இடம் உள்ளது. இதுபோல எத்தனையோ வெளிநாட்டு உணவுகள் வர்த்தகம் செய்யும் வாணிபர்கள் மூலம் நமது நாட்டிற்குள் புகுந்து அனைவருக்கும் பிடித்த உணவாக மாறி உள்ளது. அதேபோல நமது நாடு உணவுகளும் பல நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டிற்கு மிகவும் பிடித்த உணவாக மாறி உள்ளன.
அப்படி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டிற்குள் புகுந்து அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியதுதான் பார்பிக்யூ. வறுக்கப்பட்ட இறைச்சி என்ற பெயரில் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் அது உண்மையில் வறுக்கப்பட்ட இறைச்சி கிடையாது. வெப்ப தனலில் மிகவும் மெதுவாக சமைக்கப்படும் உணவுதான் பார்பிக்யூ. இப்படி சமைப்பது தான் பாரம்பரிய சமையல் முறையாக இருந்து வந்துள்ளது.
மத்திய அமெரிக்க பகுதியில் தான் இந்த பார்பிக்யூ உணவு தயாரிப்பு முறை தொடங்கியது. நீண்ட நாட்கள் உண்பதற்காக இந்த உணவு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. வத்தல் மற்றும் உலர் பழங்கள் எப்படி நீண்ட நாட்களுக்கு காயவைத்து பயன்படுத்தப்படுகிறதோ அதேபோலத்தான் இந்த பார்பிக்யூ உணவு முறையும்.