Thirukameswarar: சாபம் பெற்ற பிரம்மதேவர்.. நிவர்த்தி கொடுத்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த திருக்காமீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirukameswarar: சாபம் பெற்ற பிரம்மதேவர்.. நிவர்த்தி கொடுத்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த திருக்காமீஸ்வரர்

Thirukameswarar: சாபம் பெற்ற பிரம்மதேவர்.. நிவர்த்தி கொடுத்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த திருக்காமீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 20, 2024 06:30 AM IST

Thirukameswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது தான் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருகாமீஸ்வரர் எனவும் தாயார் கோகுலாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Thirukameswarar: சாபம் பெற்ற பிரம்மதேவர்.. நிவர்த்தி கொடுத்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த திருக்காமீஸ்வரர்
Thirukameswarar: சாபம் பெற்ற பிரம்மதேவர்.. நிவர்த்தி கொடுத்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த திருக்காமீஸ்வரர்

மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு சிவபெருமானை அனைவரும் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வாழ்ந்து வந்தாலும் அனைவருக்கும் குல தெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். போர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பல கோயில்களை அவர்கள் கட்டிச் சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக அந்த கோயில்கள் நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி எத்தனையோ கோயில்கள் வரலாற்றின் சரித்திர குறியீடாக இங்கு விளங்கி வருகின்றன.

அந்த வகையில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது தான் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருகாமீஸ்வரர் எனவும் தாயார் கோகுலாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

அனைத்து கோயில்களிலும் தீபாராதனை காட்டும் பொழுது காமேஸ்வரோ என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெற்று இருக்கும் அதற்கு இவரே முழு முதல் காரணியாக திகழ்ந்து வருகின்றார். எந்த சிவபெருமான் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அவரை இந்த திருக்கோயிலில் ஆதாரமாக வைத்திருக்கின்றார்.

சோழ மன்னன் ஒருவர் முன் ஜென்ம பாவத்தால் வெண்குஷ்டம் ஏற்பட்டு துன்பப்பட்டு வந்தார். அந்த நோய் நீங்குவதற்காக சிவனை வழிபட்டு இந்த திருக்குளத்தில் நீராடி தனது சாபத்தை நிவர்த்தி பெற்றார். வில்வ வனமாக இருந்த இந்த காட்டை அழித்து சிவபெருமானுக்கு கோயில் கட்டி இந்த ஊருக்கு வில்வநல்லூர் என பெயரிட்டார். இதுவே காலப்போக்கில் வில்லியனூர் என அழைக்கப்பட்டது.

தல புராணம்

ஒருமுறை விஷ்ணு பகவானுக்கும் பிரம்மதேவருக்கும் போட்டி ஏற்பட்டது. தங்களுக்குள் யார் பெரியவர் என போரிட்டு வந்தனர். அப்போது அதற்கு விடை தெரிவதற்காக சிவபெருமானை நோக்கி இருவரும் சென்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் எனது முடியையும் அடியையும் யார் முதலில் காண்கின்றார்களோ அவர்களே பெரியவர் என கூறினார்.

விஷ்ணு பகவான் நான் எதையும் காணவில்லை எனக் கூறி ஒப்புக்கொண்டார். பிரம்மதேவர் நான் பார்த்து விட்டேன் என கூறி ஏமாற்றிவிட்டார். உடனே கோபமடைந்த சிவன் பிரம்மதேவருக்கு சாபம் கொடுத்தார். சாபமடைந்த பிரம்ம தேவர் வருத்தப்பட்டு தனது பாவத்தை போக்கும்படி சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார்.

சிவபெருமான் தொண்டை நாட்டில் இருக்கக்கூடிய முத்தாரின் என்ற நதிக்கரையில் வில்வ வனம் உள்ளது அங்கு சென்று சிவபூஜை செய்தால் உனக்கு சாபம் நிவர்த்தி அடையும் என கூறினார். பிரம்மதேவரும் சிவபெருமான் கூறியது போல பிரம்ம தீர்த்தம் ஒன்று உருவாக்கி சிவபெருமானுக்கு பூஜை செய்து சாபத்திலிருந்து நிவர்த்தி பெற்றார். அதுவே தற்போது இங்கு இருக்கக்கூடிய அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner