Sivan Month 2024: இது சிவன்மாதம்.. குங்குமம், மஞ்சள், சங்கு வழிபாடு கூடாது மீறினால்.. சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sivan Month 2024: இது சிவன்மாதம்.. குங்குமம், மஞ்சள், சங்கு வழிபாடு கூடாது மீறினால்.. சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!

Sivan Month 2024: இது சிவன்மாதம்.. குங்குமம், மஞ்சள், சங்கு வழிபாடு கூடாது மீறினால்.. சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 29, 2024 09:26 AM IST

Sivan Month 2024: சிவலிங்கத்திற்கு குங்குமம் கொடுக்கக் கூடாது. காரணம், சிவன் படைப்பை அழிப்பவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் பார்வதி தேவிக்கு விருப்பபடும் பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் வேண்டுதல்களை கேட்கலாம். இது உங்களை நீண்ட ஆயுளோடு வாழ வழி வகுக்கும். - சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!

Sivan Month 2024: இது சிவன்மாதம்.. குங்குமம், மஞ்சள், சங்கு வழிபாடு கூடாது மீறினால்.. சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!
Sivan Month 2024: இது சிவன்மாதம்.. குங்குமம், மஞ்சள், சங்கு வழிபாடு கூடாது மீறினால்.. சிவனை கோபப்படுத்தும் வழிபாடுகள்!

ஜுலை 29, ஆகஸ்ட் 5, 12, 19 ஆகிய தேதிகளில் வரும் திங்கள் கிழமைகளில், பகவான் சிவனுக்காக விரதம் இருந்து வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். காரணம், இவையனைத்தும் சிவனுக்கான மாதத்தில் வருகிறது. சனாதன தர்மத்தில், சிவனுக்கான மாதம், மகத்தான மத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. சிவ பக்தர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில், சிவனுக்காக விரதம் இருந்து வழிபட்டு, அவன் அருள் பெறுவதும், வழிமுறையாக இருக்கிறது. 

சில சிவ பக்தர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில், சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளையும் செய்வார்கள். இந்த ஆண்டு சிவன் மாதத்தில் அவனை வழிபட ஏற்றவாறாக  5 திங்கட்கிழமைகள் வருகின்றன. 

அதன்படி, ஜூலை மாதத்தில் 2 திங்கள் கிழமைகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 3 திங்கள் கிழமைகளும் என மொத்தமாக 5 திங்கள் கிழமைகள் வருகின்றன. இந்த வழிபாடு நன்மை கொடுக்கும் என்றாலும், இந்த சிவன் மாதத்தில் அறியாமல் நாம் செய்யும் சில பிழைகள், நம்முடைய நிதி நிலைமையை தடுமாற செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஜோதிட நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். ஆகையால் சிவன் மாதத்தில் நீங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் எந்தெந்த காரியங்களை செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம். 

குங்குமம் கொடுக்காதீர்கள்

சிவலிங்கத்திற்கு குங்குமம் கொடுக்கக் கூடாது. காரணம், சிவன் படைப்பை அழிப்பவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் பார்வதி தேவிக்கு விருப்பபடும் பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் வேண்டுதல்களை கேட்கலாம். இது உங்களை நீண்ட ஆயுளோடு வாழ வழி வகுக்கும்.

அதிக உணவு - அதிக மது வேண்டாம் 

சிவன் அதிகமாக மது உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். அதே போல, அதிகமான உணவை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து விடுங்கள். இது சிவ பெருமானுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

மஞ்சள் கொடுக்க வேண்டாம் 

சிவன் மாதத்தில், சிவனை வழிபடும் போது மஞ்சளை பயன்படுத்தவே கூடாது. சிவலிங்கத்தின் மீது மஞ்சள் பிரசாதம் கொடுப்பது குற்ற உணர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

துளசி இலையும் வேண்டாம் 

சிவன் மாதத்தில் துளசி இலையை சிவபெருமானுக்கு படைக்கக்கூடாது. துளசி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. எனவே சிவபூஜை செய்யும் போது, துளசி இலைகளை சிவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. அதே போல, துளசி மாலையால் சிவ மந்திரத்தை உச்சரிக்கவும் கூடாது.

இந்த மாதம் யாரையும் புண்படுத்தாமல் விவாதங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். யாரையும் கேலி செய்யவோ கூடாது.

சங்கு பயன்படுத்த வேண்டாம்

சங்கு பயன்படுத்துவதும் சிவபெருமானின் வழிபாட்டில் விலக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் சங்குட் என்ற அரக்கனைக் கொன்றார். ஆகையால், சங்கு வைத்து சிவனை ஜலபிஷேகம் செய்யக்கூடாது.

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, தொடர்புடைய துறையில் நிபுணரை அணுகவும்.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்