தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit: தலை மேல் பணமழை கொட்டப் போகும் செவ்வாய்.. அந்த 4 ராசிக்காரர்கள் நீங்களா?

Mars Transit: தலை மேல் பணமழை கொட்டப் போகும் செவ்வாய்.. அந்த 4 ராசிக்காரர்கள் நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 14, 2023 11:15 AM IST

செவ்வாய் பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

நவகிரகங்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றி பெயர்ச்சி அடைகின்றனர். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். இந்நிலையில் செவ்வாய் பகவான் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று கன்னி ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் மீது காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கி வருகிறார். இந்த கிரக பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. எதிரிகளை வெல்லக் கூடிய பலம் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உங்களுக்கு அனைத்து செயல்களும் லாபகரமாக அமையும்.

மிதுன ராசி

 

கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு வீடு மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த வேலையை முழு அர்ப்பணிப்போடு செய்து முடிக்க வேண்டிய மன தைரியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

விருச்சிக ராசி

 

உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் செவ்வாய் பகவான். புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்து முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதிவு உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

தனுசு ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புள்ளது. திருமண பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்கள் திறமையால் அனைத்து செயல்களையும் முடித்துக் காட்டுவீர்கள்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவாக கொடுக்கப்பட்டுள்ளன. தேவை என்றால் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்