தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Transit 2023: இன்று சுக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்ட வாழ்க்கை இந்த ராசிகளுக்கு ஆரம்பம்!

Sukra Transit 2023: இன்று சுக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்ட வாழ்க்கை இந்த ராசிகளுக்கு ஆரம்பம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 18, 2023 11:14 AM IST

சுக்கிர பகவானின் பெயர்ச்சியால் பலன்களைப் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

சுப கிரகங்களில் ஒன்றாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், அழகு, காதல், திருமணம், வெற்றி உள்ளிட்டவற்றிற்கு காரணியாக உள்ளது. சுப்ரபகவான் இன்று இரவு 7 மணி அளவில் கடக ராசியிலிருந்து உதயமாகிறார். இந்த ராசியில் 23 நாட்கள் பயணம் செய்வார்.

ஒருவர் ராசியில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை, மகழ்ச்சி குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது கடக ராசியில் அவர் உச்சம் பெற இருப்பதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் விலகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கை முன்னேற்றம் அடையும். இது உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு சுக்கிர பகவான் அதிபதியாக விளங்கி வருகிறார். முதல் வீடான நான்காம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உண்டாகும். ஆளுமை அதிகரிக்கும் அதனால் அனைவரும் உங்களை தேடி வருவார்கள்.

மீன ராசி

 

காதல் வாழ்க்கையில் இருக்க கூடிய சிக்கல்கள் அனைத்தும் விலகும். இதுவரை போராடி வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும். திருமண வாக்கியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்