தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Transit 2023: சனியால் உச்சத்திற்கு செல்லும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Sani Transit 2023: சனியால் உச்சத்திற்கு செல்லும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 12, 2023 11:55 AM IST

சனிபகவானால் அதிர்ஷ்ட மலையில் நனைய போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

மனித வாழ்க்கையில் கிரகங்களின் மாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் சனி கிரகமும் ஒன்று. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை சனி பகவான் மாற்றிக் கொள்வார்.

தற்போது சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு வரை இங்கேயே பயணம் செய்வார். இதன் மூலம் பலன்களைப் பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

இந்த சனிப்பெயர்ச்சியானது உங்கள் ராசியில் பதினோராம் வீட்டில் நடந்துள்ளது. இதன் மூலம் சனி பகவான் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கொடுப்பார். புதிய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு நலம் உண்டாகும். மனநிலை கட்டுப்பாடாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி

 

இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் ராசியின் பத்தாம் வீட்டில் சனிபகவான் நுழைந்துள்ளார். நேர்மை மற்றும் கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலைகள் தொடங்கினால் லாபம் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

இந்த ராசியில் ஏழாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். சனிபகவானால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் உதவி உண்டாகும். அதிர்ஷ்டம் தேடி வரும். சம்பாதித்த பணத்தை சேமிக்க நல்ல வாய்ப்பாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவையென்றால் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்