தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிரிவதால் மகிழ்ச்சி பெறும் ராசிகள்.. ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. பண மழையில் குளிக்கப் போகும் ராசிகள்!

பிரிவதால் மகிழ்ச்சி பெறும் ராசிகள்.. ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. பண மழையில் குளிக்கப் போகும் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 06:04 PM IST

Rahu and Surya: கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதனால் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவு அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு மற்றும் சூரியன்
ராகு மற்றும் சூரியன்

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மீன ராசியில் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதனால் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவு அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி

 

ராகு சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரித்து முன்னேற்றம் கிடைக்கும். புதிய உறவினர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களது திறமையால் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

கடக ராசி

 

ராகு மற்றும் சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.

மிதுன ராசி

 

ராகு மற்றும் சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் தான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்