தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு ஆப்பு வைக்கப் போகிறார்.. மே முதல் சாட்டையடி.. விரட்டி விரட்டி அடி வாங்க போகும் ராசிகள்.. நீங்க மாட்டுவது உறுதி

குரு ஆப்பு வைக்கப் போகிறார்.. மே முதல் சாட்டையடி.. விரட்டி விரட்டி அடி வாங்க போகும் ராசிகள்.. நீங்க மாட்டுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 11:10 AM IST

Guru Bhagavan: குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற்றாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி 2024
குரு பெயர்ச்சி 2024

குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற்றாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் மதப்பற்று உங்களுக்கு பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு குரு பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வீட்டில் சாதகம் அற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. உடன் பிறந்தவர்களோடு நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடன் சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். முடிந்தவரை மற்றவர்களிடம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நிதி ரீதியாக உங்களுக்கு பலவீனமான காலமாக இது அமைய அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். சட்ட சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக கவனத்தோடு நீங்கள் இருக்க வேண்டிய ஆண்டாக இது அமைந்துள்ளது. குருபகவானின் இடமாற்றத்திற்கு பிறகு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் விலகி இருப்பது மிகவும் நல்லது. உடன் பிறந்தவர்களோடு மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel