Today Rasi Palan: மே 25 - கவனமாக இருக்க வேண்டும்..!
மே 25ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
முக்கியமான தகவல்கள் உங்களைத் தேடி வருவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். வேலை செய்யும் இடத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். மற்றவர்களின் வேலையில் தலையிடாதீர்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி
உங்களது குடும்பத்தைப் பிரிய வாய்ப்புள்ளது. மங்கல நிகழ்ச்சிகளால் செலவு அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினை ஏற்படும், தொழிலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது.
மிதுன ராசி
நகைகள் வாங்குவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலக பணிகளை பொறுத்தளவில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் சமமான நிலையில் பயணம் செய்யும். பழைய கடன்களைத் தேடி வாங்குவீர்கள். தொடர் பிரச்சனைகள் சரியாகும்.
கடக ராசி
வீடு கட்ட அதிக வாய்ப்பு உள்ளது, உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். குடும்பத்தின் மூலம் உதவி கிடைக்கும், இதுவரை வராமல் இருந்த கடன்கள் உங்களைத் தேடி வரும். பல பிரச்சனைகளைத் தாண்டி வியாபாரம் சிறப்பாகச் செயல்படும்.
சிம்ம ராசி
கடன் சிக்கல்கள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொகையைத் திருப்பித் தர வேண்டும். சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் இறங்க வேண்டாம்.
கன்னி ராசி
எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக நகை, வீடு, வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் தீரும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்களது வளர்ச்சி இருக்கும். சொத்து சிக்கல்கள் தீரும்.
விருச்சிக ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். சிக்கல்கள் தீரும். வியாபாரம் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
மற்றவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த உதவிகள் வரத் தாமதமாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மகர ராசி
நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிறு வியாபாரிகளுக்குப் பெரிய லாபம் இருக்காது. பயணங்கள் நல்ல பலன்களைத் தராது. உறவினர்களிடம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கும்ப ராசி
புதிதாக நகை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
மீன ராசி
சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடினமான உழைப்பால் பணவரவு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.