தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: சனிபகவானால் யோகத்தில் வாழப்போகும் ராசிகள்

Sani Luck: சனிபகவானால் யோகத்தில் வாழப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2023 10:30 AM IST

சனிபகவானால் பலன்களைப் பெறும் குறித்து இங்கே காண்போம்.

Lord Saturn
Lord Saturn

சனிபகவானின் பெயரை கேட்டாலே பயந்து அத்தனை பேரும் ஓடுவார்கள். தீய செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக கொடுக்கக்கூடிய நீதிமான் தான் சனி பகவான்.

நன்மைகளாக இருந்தாலும், தீமைகளாக இருந்தாலும் செய்யும் செய்வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறது. இதனால் ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. சனிபகவானின் திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்காத வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்