தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maharaja Yoga: புதன் கொட்டும் பண மழையில் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்!

Maharaja Yoga: புதன் கொட்டும் பண மழையில் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2023 11:40 AM IST

புதன் பெயர்ச்சியால் ராஜயோகம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பகவான்
புதன் பகவான்

அந்த வகையில் புதன் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்து வருகிறார். அதற்குப் பிறகு கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளதால் சில ராசிகள் அசுப பலன்களையும், சில ராசிகள் சுப பலன்களையும் பெறப்போகின்றன. இதில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக போகின்றது. தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீரென நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பழைய கடன் சிக்கல்கள் தீரும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் பெயர்ச்சி அடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. கடின உழைப்பு எதிர்காலத்தில் நன்மையை பெற்று தரும்.

மகர ராசி

 

புதன் பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக இது அமையப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும் சூழ்நிலை அதிகமாகும். கடன் சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டிய தருணமாக இது மாறும். தன்னம்பிக்கை அதிகமாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்