தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Vakra: செவ்வாயிடம் சிக்கி சிதைய போகும் 4 ராசிக்காரர்கள்

Mars Vakra: செவ்வாயிடம் சிக்கி சிதைய போகும் 4 ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 27, 2023 10:49 AM IST

செவ்வாய் பகவானால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

செவ்வாய் பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றுவார். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கன்னி ராசிக்குள் நுழைந்தார். வரும் அக்டோபர் மாதம் வரை செவ்வாய் பகவான் கன்னி ராசி இல்லையே பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கி உள்ளது. திடீர் பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக கவனத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாய் கொடுத்து மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களை பற்றி பேசாதீர்கள். வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகிறார் இதனால் சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோபத்தை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை தற்போது தள்ளி வைப்பது நல்லது. பேசும்போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்