தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit: செவ்வாயால் அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள்

Mars Transit: செவ்வாயால் அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 28, 2023 01:02 PM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் சஞ்சாரம் செய்ய உள்ளே நுழைந்தார். வரும் அக்டோபர் மூன்றாம் தேதி வரை செவ்வாய் பகவான் பயணம் செய்வார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட இந்த மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வீரம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துக்கள் உங்களைச் சேரும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் செஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அடிப்படையிலேயே வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் விரிவாகும். புதிதாக நிலம் வந்ததற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் செஞ்சாரம் செய்கிறார். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதேபோல வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. செவ்வாய் பகவானின் முழு ஆதரவால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்