தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Mercury: ராகுவை விரட்டி பிடிக்க போகும் புதன்.. 3 ராசிகளுக்கு யோகம்

Rahu Mercury: ராகுவை விரட்டி பிடிக்க போகும் புதன்.. 3 ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 14, 2024 12:58 PM IST

ராகு புதன் சேர்க்கையால் பணத்தில் குளிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு புதன் சேர்க்கை
ராகு புதன் சேர்க்கை

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் இடமாற்றம் செய்தார். இந்த ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வரும் புதன் பகவான் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் புதனும் அவரோடு சேர்கின்றார். இவர்களுடைய சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளது.

இவர்களுடைய இடமாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

புதன் மற்றும் ராகு உடைய சேர்க்கை உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிர்காலத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். பேச்சு திறமையால் காரிய வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ராகு மற்றும் புதனும் சேர்ந்து பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர உள்ளனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மிகத்தின் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel