தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜூன் வரை ஆப்பு ரெடி.. 3 ராசிகளை குறி வைத்து அடிக்க போகும் செவ்வாய்.. 18 வருடங்களுக்குப் பிறகு அங்காரக யோகம்

ஜூன் வரை ஆப்பு ரெடி.. 3 ராசிகளை குறி வைத்து அடிக்க போகும் செவ்வாய்.. 18 வருடங்களுக்குப் பிறகு அங்காரக யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 04:50 PM IST

Lord Mars: அங்காரக யோகத்தின் தாக்கம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இது ஒரு அசுப யோகம் என்பதால் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

 அங்காரக யோகம்
அங்காரக யோகம்

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாய் விளங்கிவரும் செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது மீன ராசியில் ராகு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது.

அங்காரக யோகத்தின் தாக்கம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இது ஒரு அசுப யோகம் என்பதால் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகு செவ்வாய் சேர்க்கையால் உருவான அங்காரக யோகத்தால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் அங்காரக யோகம் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமற்றதாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான புதிய சவால்கள் உங்களை வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்களிடமிருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் அங்கார கை யோகம் உருவாக்கி உள்ளது. இதனால் நீங்கள் மிகவும் கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கையில் வழிநடத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர சற்று தாமதமாகும். சிறிய வேலையாக இருந்தாலும் அது முடிவதற்கு நெடுங்காலம் எடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் தோல்வியடைய கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். அதற்குப் பிறகு அந்த பணத்தை திரும்பி வாங்க கஷ்டப்படுவீர்கள்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் அங்காரக யோகம் குடும்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும். இதனால் திருமணம் ஆனவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான மோசமான பலன்கள் கிடைக்கும். அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். மிகவும் பொறுமையாக கையாண்டால் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. அதிக கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தற்போது புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel