தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Angry: புதனால் சோகமாகப் போகும் ராசிகள்

Mercury Angry: புதனால் சோகமாகப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 20, 2023 11:12 AM IST

புதன் பெயர்ச்சியால் துன்பப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

புதன் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்து வருவதால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இதனால் சில சிக்கல்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் மேலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் கஷ்டமான சூழ்நிலை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.

ரிஷப ராசி

 

தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. புதன் பகவானால் நீங்கள் சில சிக்கல்களை காணப்போகின்றீர்கள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எதிர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்