தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran: சுக்கிரனால் இந்த ராசிகளுக்கு எப்பவோ ராஜயோகம் தொடங்கிடுச்சு

Sukran: சுக்கிரனால் இந்த ராசிகளுக்கு எப்பவோ ராஜயோகம் தொடங்கிடுச்சு

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 28, 2023 10:50 AM IST

சுக்கிர பகவானால் பணயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

இந்த கிரக மாற்றங்கள் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கிடைக்கும். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமானார். இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் இரண்டாம் வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட பலன்களை நீங்கள் அனுபவிக்க போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரிடம் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சுக்கிர பகவான் உதயமாகின்றார். அனைத்து விதமான வழிகளிலும் பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய முதலீடுகள் செய்வதற்கு சரியான நேரம் இது. நண்பர்களால் உதவி கிடைக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிர பகவான் பத்தாம் வீட்டில் உதயமாகியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டபடி வருமானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்