தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: செவ்வாய் யோகத்தால் உச்சம் செல்லும் ராசிகள்

Lord Mars: செவ்வாய் யோகத்தால் உச்சம் செல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 14, 2024 10:44 AM IST

Lord Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்ளும் கிரகங்களால் மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி சனி பகவானின் மகர ராசியில் நுழைந்தார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்களுக்கு மங்களகரமான பலன்களை கொடுக்கப் போகின்றார். சுப பலன்கள் உங்களை தேடி வரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். கடின உழைப்பு நல்ல வெற்றியை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கப்படும் பெரிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட யோகங்கள் கிடைக்க உள்ளன. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் லாபத்தை பெற வேண்டும் என்றால் பொறுமையாக கையாள வேண்டும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மிகவும் அவசியமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel