தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra 2023: தாராள பிரபுவாக மாறிய சுக்கிரன்.. இந்த ராசிகளை இனி பிடிக்க முடியாது

Sukra 2023: தாராள பிரபுவாக மாறிய சுக்கிரன்.. இந்த ராசிகளை இனி பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 28, 2023 11:30 AM IST

சுக்கிரனால் ராஜ வாழ்க்கை பெற போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

சுக்கிர பகவான் நவம்பர் மூன்றாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சிலர் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் வெற்றியைத் தரும்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு நன்மைகளை பெற்று தர போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வருமானத்திற்கு புதிய வழிகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

உங்களுக்கு தேவையான பலன்களை சுக்கிர பகவான் கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். கடின உழைப்பு முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்