தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Dosha: சனியின் பிடியிலிருந்து காப்பாற்றும் நள தீர்த்தம்

Sani Dosha: சனியின் பிடியிலிருந்து காப்பாற்றும் நள தீர்த்தம்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 12, 2023 10:53 AM IST

திருநள்ளாறு சனிபகவான் கோயிலின் நளதீர்த்தத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

திருநள்ளாறு சனிபகவான்
திருநள்ளாறு சனிபகவான்

சனிபகவானுக்கு உரிய தலமாக விளங்கக்கூடியது திருநள்ளாறு. சனிபகவானிடம் சிக்கிக் கொண்டு அவதிப்படும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து பரிகாரத்தை செய்து சனி பகவானின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர்.

இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், அட்டதிக்கு பாலகர் தீர்த்தங்கள், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் முதலியவற்றில் நீராட வேண்டும். அதன்பின்னர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு நள தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

இந்த நள தீர்த்தம் ஆனது திருநள்ளாறு கோயிலில் இருந்து சற்று தள்ளி உள்ளது. இந்த தீர்த்தத்தின் கரையில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தீர்த்தத்தில் நீராடி விட்டு விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

இதில் நீராடி புது துணி உடுத்தி விநாயகரை வழிபட்டு விட்டு அதன் பின் இறைவன் மற்றும் அம்பிகை சனி பகவான் ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும். கோயிலில் இருக்கக்கூடிய காகத்திற்கு சோறு வைக்க வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்று வழிபாடு செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று இந்த கோயிலுக்கு சென்று சனிக்கிழமை காலை இந்த தீர்த்தத்தில் நீராடி பரிகார முறைகளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் சனி பகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்