தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Suriyan Bad: இரண்டு கிரகங்கள் விரட்டி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்

Sani Suriyan Bad: இரண்டு கிரகங்கள் விரட்டி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 14, 2023 11:32 AM IST

சூரியனும், சனியும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்வதால் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தில் இருந்தாலும் எந்த கிரகம் அதிபதியாக இருக்கின்றதோ அதனுடைய அடிப்படை குணாதிசயங்களை அந்தந்த ராசிக்காரர்கள் பேசியிருப்பார்கள்.

கிரகங்களின் மாற்றம் எப்படி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ. கிரகங்களின் குணாதிசயங்களை பெற்றிருக்கக் கூடியவர்கள் அந்தந்த குண நலன்களை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பணத்தை செலவு செய்யாமல் சிக்கனப்படுத்தும் சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இந்த நிகழ்வு தற்செயலாக நடந்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டமான மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம் ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். தன்னம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்