தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குரு பணமழை.. ஒரு ஆண்டு உங்கள் ராஜ்ஜியம் தான்!

Guru Peyarchi: குரு பணமழை.. ஒரு ஆண்டு உங்கள் ராஜ்ஜியம் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2023 11:30 AM IST

குரு பகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குருபகவான்
குருபகவான்

குரு பகவான் ஜென்ம ராசியிலேயே பெயர்ச்சி அடைந்துள்ள காரணத்தினால் பல ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். 2024 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இந்த காலத்தில் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடக ராசி

 

குரு பகவான் 2024 ஆம் ஆண்டு வரை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார். உங்கள் துறையில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதிர்ஷ்டத்தின் முழு பலன்களையும் நீங்கள் பெற போகின்றீர்கள். புகழும் செல்வமும் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டம் நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக குருபகவான் இருக்கின்ற காரணத்தினால் தற்போது ஐந்தாம் வீட்டின் வழியாக மாறுகிறார். குழந்தை பாக்கியம் கிடைத்த அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்