தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Transit: புதன் லட்சுமி நாராயண ராஜயோகம் பெரும் 5 ராசிக்காரர்கள்

Mercury Transit: புதன் லட்சுமி நாராயண ராஜயோகம் பெரும் 5 ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2023 11:30 AM IST

புதன் பகவானால் லட்சுமி நாராயண ராஜ யோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

நவகிரகங்களும் எப்போதும் தங்களது ராசிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கடந்த ஜூலை 25ஆம் தேதி அன்று புதன் பகவான் சிம்ம ராசியில் புகுந்தார். இதனால் லட்சுமி நாராயணன் ராஜயோகம் உருவாக்கியுள்ளது. சுப ராஜ யோகமாக விளங்கக்கூடிய இந்த அபூர்வ யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் சிம்ம ராசியில் இருக்கின்ற காரணத்தினால் லட்சுமி நாராயண ராஜயோகம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. அறிவுக்கூர்மையின் அடிப்படையில் நீங்கள் அதிகமாக லாபம் ஈட்டுவீர்கள். வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். இனிவரும் காலம் உங்களுக்கு நல்ல நேரமாக அமையும். திட்டமிட்ட அனைத்து செயல்களும் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறார். உங்களுக்கு சிறப்பான பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி மற்றும் மரியாதை உள்ளிட்டவைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

புதன் பகவானின் பெயர்ச்சியால் உங்களுக்கு லட்சுமி நாராயண யோகம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. சமீபத்தில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்தும் விலகும். நிதி நிலைமை பலமாக மாறும். இது பணத்தை சேமிக்க கூடிய காலமாகும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு நன்மைகளை அள்ளித் தரப் போகிறார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்களை பெறப்போகின்றீர்கள்.

கும்ப ராசி

 

புதன் பகவானால் மிகவும் சாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்க போகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்