தமிழ் செய்திகள்  /  Astrology  /   Here We Will See About The Horoscope For March 23

Today Rasi Palan :மார்ச் 23 - வீட்டில் மங்கள காரியங்கள் நிகழும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2023 05:30 AM IST

மார்ச் 23 ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

எதிர்பாராத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கவலை அதிகரிக்கும். கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி

தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் தீரும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்களை உங்கள் விஷயத்தில் தலையிட விட மாட்டீர்கள். 

மிதுன ராசி

கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களைச் சிக்கல்கள் தேடி வரும். பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

குடும்பத்தின் பொறுமையாக இருப்பது நல்லது. உங்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். கவனமாக இருப்பது நல்லது. முக்கியமான விஷயங்களில் பொறுப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடுமையான முயற்சிக்குப் பொறுமையாகப் பலன் கிடைக்கும்.

சிம்ம ராசி

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்ப்புகள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்களால் பலன் கிடைக்காது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஆடம்பர செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிதாக வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் குறை இல்லாமல் செல்லும். பயணங்களால் இந்த பலன்களும் இருக்காது, தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

கடினமான உழைப்பு நல்ல பலன்களைத் தரும். கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பிள்ளைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு அவசியமாகும். குழப்பத்திலிருந்து விடுபட்டு மன நிம்மதி ஏற்படும்.

தனுசு ராசி

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும். எதிர்பாராத நேரத்தில் லாபம் உங்களைத் தேடி வரும், கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் தேடி வரும், அலுவலகப் பணியில் உற்சாகம் கிடைக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும், விவசாயத்தில் மந்தநிலை ஏற்படும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

கும்ப ராசி

சிக்கல்கள் தந்த கடன் பிரச்சினைகள் தீரும், சுற்றுவட்டாரங்களில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும், பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடரும், தடைப்பட்டிருந்த வருமானங்கள் உங்களைத் தேடி வரும்.

மீன ராசி

வேலை பிரச்சனையால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி, ஆரோக்கியம் கிடைக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்