தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit 2023: இன்று சிம்மத்தில் நுழைந்தார் சூரியன்.. 5 ராசிகளுக்கு லாபம்!

Sun Transit 2023: இன்று சிம்மத்தில் நுழைந்தார் சூரியன்.. 5 ராசிகளுக்கு லாபம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2023 12:46 PM IST

ஆவணி மாதத்தில் சூரிய பகவானால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சூரிய பகவான் இன்று சிம்ம ராசிக்குள் நுழைகிறார். 11 மாதங்கள் கழித்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார். இதுவரை கடக ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சூரிய பகவான் இன்று சிம்ம ராசிக்குள் புகுந்த காரணத்தினால் புதாதித்ய ராஜயோகம் உண்டாகி உள்ளது. இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சுப பலன்கள் உங்களுக்கு உண்டாகப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய உத்வேகம் உண்டாகும். தொட்ட காரியம் முன்னேற்றம் அடையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

மிதுன ராசி

 

சூரியனின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு புதிய தன்னம்பிக்கை உருவாகும். உயர் இடத்தில் இருப்பவர்களுடன் புதிய நட்பு உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் மற்றும் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர். சிக்கிக் கிடந்த வேலைகள் அனைத்தும் விரைவில் முடியும். திடீர் பணவரத்து உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிக ராசி

 

சிம்ம ராசிக்கு சூரிய பகவான் நுழைந்துள்ளதால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. உங்கள் மூளை சொல்வதை நீங்கள் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

தனுசு ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்