தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: குரு கொட்டும் அதிர்ஷ்டம்.. அரியணையில் ஏறப்போகும் ராசிகள்

Guru Peyarchi 2024: குரு கொட்டும் அதிர்ஷ்டம்.. அரியணையில் ஏறப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 11:44 AM IST

குரு இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குருபகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறும்பொழுது கார்த்திகை மற்றும் ரோகினி நட்சத்திரங்களில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் அமர போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வார்த்தைகளில் உண்மை இருக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

 

குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தரப் போகின்றார். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொட்ட காரியங்கள் பொன்னாகும். வீட்டில் திருமண காரியங்கள் நடக்கும் பணவரவில் எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel