தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரோதி புத்தாண்டில் கொட்டும் பணமழை.. தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட்.. இந்த ராசிகளுக்கு யோகம்

குரோதி புத்தாண்டில் கொட்டும் பணமழை.. தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 05:59 PM IST

Tamil New Year 2024: சனி பகவான் மற்றும் ராகு கேது இவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவர்கள் பயணம் செய்யும் ராசியில் பயணம் செய்வார்கள். இந்த தமிழ் புத்தாண்டில் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சித்திரை மாதம் முதல் நாள் தொடங்குகிறது. அதுவே தமிழ் புத்தாண்டு என கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் தலைவனாக விளங்கப்படும். சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக பிறக்கின்றது.

குரோதி தமிழ் புத்தாண்டு பல கிரகங்களின் மாற்றத்தை உருவாக்கும். இந்த கிரகங்களின் மாற்றமே அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். முக்கிய கிரகங்களாக விளங்கக்கூடிய சனி பகவான் மற்றும் ராகு கேது இவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவர்கள் பயணம் செய்யும் ராசியில் பயணம் செய்வார்கள். இந்த தமிழ் புத்தாண்டில் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல மாற்றங்களை கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடை மேட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்களால் பாராட்டுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடக ராசி

 

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடன் சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

சிம்ம ராசி

 

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். கடன் தொல்லை உங்களுக்கு ஏற்பட்டு இருந்தால் அது நிவர்த்தி அடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel