தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck: குரு இடமாற்றத்தால் யோகம் பெறுகின்ற ராசிகள்

Guru Luck: குரு இடமாற்றத்தால் யோகம் பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 10:42 AM IST

Guru Peyarchi: குரு பகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான். அந்த வகையில் ஒரு மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்க போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் ஆண்டாக அமையும். எனக் கூறப்படுகிறது. நிது நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

குருவின் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. மிகவும் சாதகமான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வணிகத்துறையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel