தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis: செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை..அதிர்ஷ்ட யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Lucky Rasis: செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை..அதிர்ஷ்ட யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 16, 2023 01:05 PM IST

செவ்வாய் மற்றும் சுக்கிர பகவானால் ராஜ யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார்.

செவ்வாய் பகவான் விருச்சிக ராசிகள் பயணம் செய்து வரும் அதே சூழ்நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனராசி

 

செவ்வாய் மற்றும் சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. காரணத்தினால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் தான் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இரண்டு பேரும் இணையப் போகின்றனர். உங்களுக்கு இந்த முறை சாதகமான சூழ்நிலை உருவாகப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் தொடர்ந்து வந்த வழக்குகள் முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்