தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vakra: குரு வக்ரப் பெயர்ச்சியால் ராஜாவாகப் போகும் ராசிக்காரர்கள்

Guru Vakra: குரு வக்ரப் பெயர்ச்சியால் ராஜாவாகப் போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 03, 2023 11:07 AM IST

குரு வக்ர பயணத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

குருபகவான் ஒருவர் ராசியில் உச்சத்தில் இருந்தால் அவருக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்ட யோகங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி அன்று வக்ர நிலை அடைகிறார்.

குரு பகவானின் இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் வக்ர பயணம் ஆனது உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத் தரப் போகிறது. உங்கள் ராசியில் குரு பகவான் 9 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக விளங்கி வருகிறார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்து வரும் காரியங்களில் உங்களது தன்னம்பிக்கை பிரதிபலிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

குரு பகவானின் இந்த பயணமானது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் குரு வக்ரமடைகின்ற காரணத்தினால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் வெற்றியைத் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

குருவின் வக்ர பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. குருபகவான் உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்