தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Intelligent Rasis: இயல்பிலேயே அறிவாளியான ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Intelligent Rasis: இயல்பிலேயே அறிவாளியான ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 18, 2023 12:15 PM IST

மிகவும் புத்திசாலித்தனமான சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

அறிவாளிகள்
அறிவாளிகள்

கன்னி ராசி

 

எப்போதும் பகுத்துப் பார்க்கும் எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் மிகவும் துல்லியமாக கவனம் செலுத்தக்கூடியவர்கள். இயல்பாகவே ஒரு சிக்கலை தீர்க்கக்கூடிய அணுகுமுறை இவர்களிடம் அதிகம் இருக்கும். பல்வேறு விதமான கணக்குகளை போட்டு திட்டம் தீட்டி ஒரு காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

மகர ராசி

 

பொறுமையாக ஒழுக்கத்தோடு செயல்பட்டு ஒரு விஷயத்தை கட்டமைக்க கூடிய வித்தை தெரிந்தவர்கள் இவர்கள். மிகப்பெரிய சிக்கலான விஷயங்களையும் எளிதாக கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள். மூளைக்கு அதிகம் வேலை கொடுத்து சரியான முறையில் விளக்கம் கொடுத்து சிக்கல்களை தீர்க்கக் கூடியவர்கள்.

கும்ப ராசி

 

புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி சிந்தனையால் வெற்றி பெறக் கூடியவர்கள். ஒரு காரியத்தில் தனித்துவமான தீர்வுகளை காண்பதில் இவர்கள் வல்லவர்கள். வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமாக சிந்தித்து ஒரு சிக்கலை அணுகக் கூடியவர்கள் இவர்கள். அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.

மிதுன ராசி

 

இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் விரைவாக கற்றுக் கொள்வார்கள். சிக்கலான கருத்துக்களையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய சிந்தனை கொண்டவர்கள் இவர்கள். எதிர்வரும் சவால்களை வித்தியாசமாக சமாளிக்க கூடிய திறன் கொண்டவர்கள்.

விருச்சிக ராசி

 

மன உறுதி மற்றும் கவனத்தோடு எந்த விஷயங்களையும் அணுகக் கூடியவர்கள் இவர்கள். மனநிலையை எப்போதும் ஒற்றைத் தன்மையோடு வைத்திருப்பார்கள். சிக்கலை தீர்க்கும் போது இவர்கள் சிந்திக்கும் போக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். முடிச்சுகளை அவிழ்ப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்