தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru House Luck : குரு பார்வையால் வீடு வாங்கப்போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Guru House Luck : குரு பார்வையால் வீடு வாங்கப்போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 01:00 PM IST

Guru House Luck : வீடு என்பது சராசரி மனிதனின் மாபெரும் கனவு. கடனை வாங்கியாவது வீடு கட்ட வேண்டும் என்பது மட்டும்தான் அனைவரின் கனவாக உள்ளது. கடனை வாங்கி வீடு கட்டி விட்டு, கடனை அடைப்பதற்காக ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது.

குரு பகவான்
குரு பகவான்

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இந்த குருப்பெயர்ச்சியில் வீடு வாங்க யோகம் உள்ள ராசிகள் எவை? என்று தெரிந்துகொள்ளலாம். பணம் இருந்தால் கூட குரு பலன் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கையில் வீடு வாங்க முடியும். ஏனெனில், குரு சுப கிரகமாக உள்ளது. எந்தவொரு சுப காரியமும் குரு பலன் இருந்தால் மட்டுமே நடககும்.

வீடு வாங்குவது மட்டுமல்ல திருமணம், வெளிநாடு செல்வது, வேலைவாய்ப்பு என்ற எந்தவொரு சுபகாரியமும், குரு பலன் இருந்தால், குருவின் அருள் இருந்தால் மட்டுமே கிட்டும் என்பது ஜோதிட நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை குருப்பெயர்ச்சி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இந்தாண்டு மேஷத்தில் சஞ்சரிக்கும்போது பல்வேறு ராசியினருக்கும் நற்பலன்கள் உண்டு. இந்தாண்டு குருவால் வீடு வாங்கும் யோகம் உள்ள ராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மகர ராசி – இந்தாண்டு மேஷத்தில் உள்ள குரு மகர ராசிக்கு வீடு வாங்கும் யோகத்தை கொடுக்கிறார். மகர ராசிக்காரர்களின் சுபஸ்தானத்தில் குரு இருக்கிறார். சுபஸ்தானத்தில் குரு ஓராண்டு இருப்பதால் மகர ராசி, மகர லக்னகாரர்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் வீடு வாங்கும் யோகம் கிட்டும்.

மேஷ ராசி – மேஷ ராசியிலே குரு பகவான் சஞ்சரிப்பதால், மேஷ லக்னம், மேஷ ராசிக்காரர்களுக்க இந்தாண்டு வீடு வாங்கும் யோகம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மேஷ ராசியினருக்கு அனைத்து சுப காரியங்களுக்கும் குரு பகவான் உதவுகிறார். எனவே மேஷ ராசிக்காரர்கள் தங்களுக்கு தேவையான சுப காரியங்களுக்கான முயற்சிகளை செய்து பலன் பெறலாம்.

ரிஷப ராசி - ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னகாரர்களுக்கும் வீடு வாங்கும் யோகம் உள்ளது. குரு பகவான், ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லது செய்ய மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது. ஆனாலும் வாங்க முடியும். ஏனெனில் லாப ஸ்தான அதிபதியாக ரிஷபத்துக்கு குரு பகவான் உள்ளார். குரு பகவானின் சிறப்பு பார்வை ரிஷபத்தை பார்ப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அமையும். குரு பகவான் அஷ்டமாதிபதியாக உள்ளதால், கடன் வாங்கி வாங்க வேண்டிய நிலை ஏற்டும்.

கடக ராசி - கடக ராசிக்காரர்கள் மற்றும் கடக லக்ன காரர்கள், குருவின் சுபஸ்தான பார்வை கடகத்தின் மேலும் உள்ளது. கடகத்துக்கு அவர் பாக்கியாதிபதியாகவும் இருப்பதால் வீடு வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி - கன்னி ராசி மற்றும் கன்னி லக்னகாரர்களுக்கு இந்தாண்டு குருவின் 9ம் பாக்கிய பார்வையால் கண்டிப்பாக வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. கன்னி ராசிக்கு சுபஸ்தான அதிபதியாக குரு பகவான் உள்ளார். எனவே அவர்களும் முயன்றால் வீடு வாங்க முடியும்.

மேலே குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சிறிது முயற்சியை கைவிடாமல் முயன்றால் வீடு வாங்கிவிட முடியும். எனவே அவர்கள் தொடர்ந்து முயற்சி செயது வீடு வாங்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு – இங்கு தொகுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொதுவான பலன்கள் ஆகும். எனவே துல்லியமான தகவல்களை பெறுவதற்கு ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்